மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அவதானம்
முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து முட்டை விலையை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அத தெரண வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளது.
முட்டை விலை உயர்வைத் தக்க வைத்துக் கொள்ள, உற்பத்தியாளர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் முட்டையின் அளவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முட்டை உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறைச்சிக்காக விலங்குகளை விற்பனை செய்வதும் மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.