இலங்கையில் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு: வெளியான காரணம்
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் (Sri lanka) மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அதிக மின்சாரம் நுகரப்படுகின்றது.
இதன் காரணமாக, நீர்மின்சாரத்துடன் கூடுதலாக எண்ணெய் மற்றும் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கப்படுகின்றன.
அந்த காரணங்களால் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. உலகின் சில நாடுகளில் மின்சார நுகர்வோருக்கு நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை “ப்ரீ-பெய்ட்” (pre-paid) முறைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதனால் அவர்களுக்கு அதிக மின் கட்டணம் இல்லை என்று கூறப்படுகிறது.
மின்சாரத்திற்கு ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோர் மின்சார பாவனையை குறைக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த முறையில், வாடிக்கையாளர் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான மின் நுகர்வை நிர்வகிக்க முடியும்.
இதன் மூலம், மின்சாரக் கட்டணத்தை மேலும் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.