சட்டத்தை மீறிய வேட்பாளர்கள்: எடுக்கப்பட்டவுள்ள அதிரடி நடவடிக்கை
கடந்த பொதுத் தேர்தலில் செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குச் செலவிடப்பட்ட பணத்தின் தொகையை இதுவரை வெளியிடாத வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தை மீறுபவர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செலவு அறிவிக்கையை சமர்பிக்க நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இனிமேலும் அது நீடிக்கப்படாது என தவிசாளர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பதிவு தபாலில் அல்லது அறிவித்தல் மூலமாக செலவு அறிக்கையை அனுப்பியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தலில் தோற்றியிருந்த வேட்பாளர்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் எவ்வளவு பணம் செலவழித்துள்ளார்கள் என்பது குறித்து அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.