சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான இடைக்காலத் தடை : நீதிமன்றின் உத்தரவு
கொழும்பு மாநகர சபை (Colombo Municipal Council) உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை (Local Government Election) நடத்துவதைத் தடுத்து18 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.