தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட தயாராகும் பொலிஸார்
ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் கடமைகளை மேற்பார்வையிட சிரேஷ்ட பிரதிநிதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிதவிற்கு மற்றுமொரு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் பி.லியனகே மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.ஜி.எல்.ஏ தர்மசேன ஆகியோருக்கு குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, பொலிஸ் தலைமையகத்தில் தேர்தல் பணிக்கான பிரிவு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று (26) முதல் இயங்கி வரும் அந்த பிரிவுக்கு நிலைய தளபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.