வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைகளை மிக விரைவாக அறிவிக்கக்கூடிய புதிய முறைமையை இலங்கை மின்சார சபை (Sri Lanka Electricity Board) அறிமுகப்படுத்தியுள்ளது.
1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அதிகளவானோர் முயற்சி செய்வதால் பலருக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 300,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (Twitter) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கையில், “சீரற்ற காலநிலை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 300,000 இற்கும் அதிகமான நுகர்வோருக்கு மின்சாரம் தடைப்பட்டதன் விளைவாக 36,900 இற்கும் மேற்பட்ட செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முறிவுகளில் கலந்து கொள்ள கூடுதல் சேவை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மின்சார சபை நிர்வாகம் மற்றும் சேவை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு மின்சாரத்தை மீட்டெடுக்க 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.
மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.