இலத்திரனியல் முறைக்கு மாறும் அரச நிறுவனங்கள் – வெளியான அறிவிப்பு!
அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை, நேற்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், 2024 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ளும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
மின்னணு கொள்வனவு செயல்முறையை இலத்திரனியல் முறையாக மாற்றுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கியுடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் மே மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.