சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய பாடகி.! கண்ணீர்விட்டு அழுத நடுவர்கள்.
சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா என்ற போட்டியாளர் வெளியேறியுள்ளார். நல்ல பாடகி என நடுவர்கள் மத்தியில் பெயர் எடுத்த சினேகா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்.
சினேகா மற்றும் பிரியா இருவரும் இரட்டை சகோதரிகளாக தான் சூப்பர் சிங்கரில் போட்டியாளர்களாக களமிறங்கினர்கள். ஆனால் தற்போது சினேகா குறைந்த வாக்குகள் பெற்று சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தனது சகோதரி சினேகா குறித்து பிரியா பேசுவதை கண்டு நடுவர் அனுராதா ஸ்ரீராம் கண்கலங்கிவிட்டார்.