இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது | Eng Vs Sl 2024 Test Cricket Schedule

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்லவுள்ளது.

இத் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ளது.

இத் தொடரில் இலங்கை அணி முதலில் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றது.

பின்னர், இத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.

2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறள்ளது.

மேலும் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் இத் தொடருக்கான பென் ஸ்டோர்க் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்றைய (5) தினம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இத் தொடருக்கான இலங்கை குழாம் இவ்வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுவரும் நிலையில் நாளை(7) 3ஆதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button