EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Epf Etf Money In Sri Lanka

உள்நாட்டு கடன் மேம்படுத்தல் செயற்பாட்டின் போது ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில் (ETF ) பெற்ற கடனைத் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு நேற்று(27.07.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்த மனுவை ஆகஸ்ட் 27 ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனு தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் நடவடிக்கையின் போது EPF மற்றும் ETF இலிருந்து பெற்ற கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம், அதன் தலைவர் வசந்த சமரசிங்க மற்றும் 6 பேர் சார்பில் சட்டத்தரணி சுனில் வதகல உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button