தேங்கி கிடக்கும் எத்தனோல்.!காரணம் வெளியானது.
இலங்கை சீனி கம்பனிக்கு சொந்தமான பல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளின் கீழ் அமைந்துள்ள ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 17 மில்லியன் லீற்றர் எத்தனோல் (பானம்) விற்பனை செய்ய முடியாமல் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீனி நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்வத்தை மதுபான ஆலையில் ஒன்பது இலட்சம் லீற்றரும், செவாநகர மதுபான ஆலையில் எட்டு இலட்சம் லீற்றரும் இவ்வாறு தேங்கி கிடக்கின்றது. எவரும் எத்தனோல் வாங்க முன்வராததே இதற்குக் காரணம்.
இந்த எத்தனோலின் மதிப்பு சுமார் 204 கோடி ரூபாயாகும்.லங்கா சுகர் நிறுவனம் எத்தனோலை ஒரு லீட்டர் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. மதுபானங்களின் விலை அதிகரிப்பு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, சோளத்திலிருந்து எத்தனோல் உற்பத்தி என்பன போன்ற காரணங்களால் சிலோன் சீனி நிறுவனத்திடம் இருந்து எத்தனோலை கொள்வனவு செய்வதற்கு கொள்வனவாளர்கள் தயாராக இல்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சீனி கம்பனியின் பல்வத்த தொழிற்சாலையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சமன் அமரகோன்,தெரிவிக்கையில், “பல்வத்த மற்றும் செவனகல மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட எத்தனோல் விற்பனையின் மூலம் லங்கா சுகர் நிறுவனம் பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது.
பல்வேறு காரணங்களால் எத்தனோலை கொள்வனவு செய்வதற்கு கொள்வனவாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். எதிர்காலத்தில் நிர்வாகத்துடன் கலந்துரையாடி எத்தனோல் ஒரு லீற்றரின் விற்பனை விலையை 1200 ரூபாயில் இருந்து 1000 ரூபாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.