ஐரோப்பாவில் அதிக ஊதியம் வழங்கும் நாடு: எவ்வளவு சம்பளம் தெரியுமா..!
ஐரோப்பிய நாடுகளில் ஊதியம் அதிகமாக பெறக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி சுவட்சர்லாந்து இந்த பட்டியில் முதலிடத்தில் இருக்கிறது.
இங்கு மாதாந்தம் 5880 அமெரிக்க டொலர்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிங்கப்பூர இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சுவிட்சர்லாந்தை விட 1200 டொலர் குறைவாக உள்ளது. அதாவது 4680 டொலர்களை ஊதியமாக பெறலாம்.
மூன்றாவதாக 4366 டொலர்களுடன் லக்சம்பேர்க் உள்ளது. இருப்பினும் இந்த கணக்கீடு எதனை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றது என்ற தகவல் வெளியாகவில்லை.
ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத்தின்படி சுவிட்சர்லாந்தில் சராசரியாக 6665 பிராங்குகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை மற்ற நாடுகளை விட வாழ்க்கைச் செலவு கணிசமாக அதிகமாக உள்ளது. சிலருக்கு 8500 என்ற இரட்டிப்பு வருமானம் வழங்கப்படுகின்றது.
அவை வாழக்கைச் செலவுகளுக்கு போதுமானதாக இருக்காது. எவ்வாறாயினும் மகிழ்ச்சியான நாடு என்று வரும்போது 10இற்கு 7.51 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதேபோல் அதிகரித்து வரும் வாடகைகள், பணவீக்கம் மற்றும் அதிக உடல்நலக் காப்பீட்டு போன்ற காரணங்களால் ஜுஸோ குறைந்த பட்ச ஊதியத்தை வழங்குகிறது.