E-8 விசா பிரச்சினை தொடர்பில் அமைச்சரின் தீர்மானம்
சில தரப்பினரின் தலையீட்டினால் தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளிலிருந்து விலகி செயற்படுவதன் காரணமாக, குறித்த வேலைகளுக்காக காத்திருக்கும் தொழிலாளர்களின் அசௌகரியம் குறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (20) காலை பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பணியாளர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
தென் கொரியாவில் E-8 விசா முறையின் கீழ் பணியாளர்களை பரிந்துரைப்பது குறித்து மேலும் ஆய்வு செய்யவும், அது தொடர்பான சட்ட நிலைமையை கண்டறிந்து எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் முடிவு செய்தார்.
இந்த விசேட கலந்துரையாடலில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.