இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் இந்த வருடம் மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வருட மார்ச் மாதத்தில் இறக்குமதி செலவு 1,637 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இது கடந்த வருடத்தை விட 8.6 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.