விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம் | Happy News Famers Technology Prevent Crop Damage

இலங்கையில் ஒரு நிறுவனமொன்று பயிர்களை சேதப்படுத்தும் அந்துப்பூச்சிகளை விரட்டும் எல்.ஈ.டி விளக்கை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளால் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு பயிர்கள் இழக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

இதற்கு தீர்வாக விவசாயிகள் பல்வேறு வேளாண் இரசாயனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் கடுமையான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னராக விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button