2034 கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில்
2034 ஆண்கள் கால்பந்து உலகக் கிண்ணபோட்டிகள் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) நடைபெறவுள்ளன.
அதேநேரம் ஸ்பெயின், போரத்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகியவை 2030 போட்டிகளை கூட்டாக நடத்தவுள்ளன என்பதை, உலக கால் பந்து குழுவான ஃபிஃபா (FIFA) உறுதிப்படுத்தியுள்ளது.
போட்டிகளின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030 போட்டிகளில் மூன்று போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்புக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை நடந்த, விசேட ஃபிஃபா காங்கிரஸ் கூட்டத்தில், குறித்த இரண்டு உலகக் கிண்ணங்களுக்கான நாடுகள் உறுதி செய்யப்பட்டன.