ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை – கனடா அதிரடி!
கனடா அரசாங்கம் இதுவரை உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் டொலர் அளவிலான பொருளாதார, இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக கனடா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
டொரோண்டோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஸ்மிஹல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கு கனடாவில் இருந்து 21,000 ரைபிள்கள், 38 இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 24 லட்சம் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யாவை சேர்ந்த 14 நபர்கள் மற்றும் 34 நிறுவனங்கள் மீது கனடா அரசாங்கம் பொருளாதார தடைகளை விதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.