மெஸ்ஸியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!
ஆர்ஜன்டினாவில் மெஸ்ஸியின் குடும்பத்திற்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) பயங்கர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ஜன்டினாவின் ரொசாரியோவில் உள்ள லியோனல் மெஸ்ஸியின் மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்.
அதில், “மெஸ்ஸி, உனக்காகக் தான் காத்திருக்கிறோம். ஜாவ்கின் ஒரு நார்கோ, அவர் உன்னை பாதுகாக்க மாட்டார்” என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியில் ஜாவ்கின் என்பது மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோ நகரின் மேயர் பாப்லோ ஜாவ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோவின் (Antonela Roccuzzo) குடும்பத்திற்கு சொந்தமான குறித்த பல்பொருள் அங்காடி ரொசாரியோ நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் உந்துருளியில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வெளியே ஊடகங்களுடன் பேசிய மேயர் ஜாவ்கின், “சந்தேகநபர்கள் நகரத்தில் உள்ள கும்பல்களாக இருக்கலாம்
மேலும், உலகின் மிகவும் பிரபலமான நபரைப் பற்றி பேசுவது, மிரட்டல் விடுப்பது என்பது சாதாரணமானது. மேலும், எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. ரோக்குசோ குடும்பத்தை வளாகத்தைத் திறந்து சாதாரணமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.” என தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு குற்றப் புலனாய்வுப் காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெப்ரவரி 27 அன்று பாரிஸில் வழங்கப்பட்ட சிறந்த விருதுகளில் உலகின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ரோகுஸோவின் குடும்பத்தின் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுவரை, மெஸ்ஸியோ அல்லது அவரது மனைவியோ ரொசாரியோவில் என்ன நடந்தது என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மெஸ்ஸி தற்போது அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் பிரான்சில் வசிக்கின்றனர்.
கத்தார் 2022 உலகக் கோப்பையில் ஆர்ஜன்டினா வெற்றி பெற்ற பிறகு, லியோனல் கடைசியாக ரொசாரியோவில் கடந்த டிசம்பர் மாதம் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.