பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு!

பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு - 40 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள அபாயம் | Wheat Flour Food Shortage Of Climate Changes

பிரான்சில் (France) முக்கிய உணவு பொருளான கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் மோசமான காலநிலை காரணமாக கோதுமை விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25.17 மில்லியன் தொன்களால் இந்த உற்பத்தி நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையானது கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் 18.7% சதவீத வீழ்ச்சியாகும்.

கடந்த இலையுதிர் காலத்தில் மிக அதிகளவு மழை பதிவாகியிருந்தது. இந்த மழை விவசாயத்தை பெருளவில் பாதித்திருந்தது.

அதில் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தது கோதுமை உற்பத்தி என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button