எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பெட்ரோலிய பொருள் விநியோக ஒன்றியம் அறிவித்துள்ளது.
அதில் நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விலை திருத்தம் காரணமாக அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிபொருள் கொள்வனவிற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே எரிபொருளுக்குத் தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருட்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறெனினும், நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு கிடையாது எனவும் இந்த தட்டுப்பாடு செயற்கையானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (01.06.2023) மாலை மற்றும் நாளை (02.06.2023) காலை அளவில் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.