எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல் | Sri Lanka Fuel Prices And Shortage

நாட்டில் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா (Janaka Rajakaruna) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு எவ்வித சிக்கலும் இன்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும்

தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெட்ரோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button