ஜேர்மனியில் வேலைவாய்ப்பு – தளர்த்தப்படவுள்ள தடைகள்
ஜேர்மனியில் உணவகத்துறை, விருந்தோம்பல் துறை முதலான துறைகளில் ஏராளமான பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றிவந்த பணியாளர்கள் பலர், கொரோனா காலகட்டத்தில் தங்கள் வேலைகளை விட்டு விட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
அதனால், நாட்டின் விருந்தோம்பல் துறையில் இன்னமும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, அந்த பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து பணியாளர்கள் ஜேர்மனி வருவதற்கு தடையாக இருக்கும் சில புலம்பெயர்தல் தொடர்பான தடைகளை நீக்க ஜேர்மன் அரசு திட்டமிட்டுவருகிறது.
ஜேர்மனியில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, ஆண்டொன்றிற்கு ஜேர்மனிக்கு 400,000 புதிய பணியாளர்கள் தேவைப்படுவதாக பெடரல் தொழிலாளர் துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது. ஆகவே, தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.