ஜெர்மனியில் புதிய விசா நடைமுறை – யாருக்கு அதிக வாய்ப்பு தெரியுமா..!

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜெர்மனி சான்ஸ்லர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி விசா வழங்குவதை விரைவுபடுத்த விரும்புகிறது. இது மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கு முடிவு செய்துள்ளது.

ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தோருக்கான முக்கியத் தடைகளைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காவே இப்புதிய சட்டத்தின் நோக்கமாகும், இதில் கல்விச் சான்றுகளை அங்கீகரிப்பது தொடர்பான சிக்கலான செயல்முறையும் அடங்குவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் புதிய விசா நடைமுறை - யாருக்கு அதிக வாய்ப்பு தெரியுமா..! | Germany Visa Requirements

ஜெர்மனி, உலகின் பிற முக்கியத் தொழில்துறை நாடுகளைப் போலவே, அதிகப்படியான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. தற்போது பிரிட்டன் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாகத் திறமையான உயர்-வளர்ச்சித் துறைகளில் அதிகப்படியான ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் இந்த ஆண்டும் பொருளாதாரத்தில் மந்தநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தான்  கணினி நிபுணர்கள் ஜெர்மனியில் பணியாற்றுவதற்கான விசா பெறுவதற்கான பாதையை எளிதாக்க தனது அரசாங்கம் விரும்புகிறது என்று ஜெர்மனி சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.

அடிப்படையாக வேகமாகவும் எளிதாகவும் தகுந்தி வாய்ந்த பணியாளர்களுக்கு விசா வழங்குவதை எளிதாக்க விரும்புகிறோம் என்று பெங்களூர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது தெரிரிவித்தார் ஓலாஃப் ஷோல்ஸ்.

இதைச் சாத்தியமாக்க விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளோம் என ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்தார்.

ஜெர்மனியில் புதிய விசா நடைமுறை - யாருக்கு அதிக வாய்ப்பு தெரியுமா..! | Germany Visa Requirements

இது வெளிநாட்டில் சென்று பணியாற்ற கனவு கொண்ட அனைத்து டெக் ஊழியர்களுக்கும் பயனளிக்கும். அதன்படி பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற அதிக எண்ணிக்கையிலான நிபுணர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நீல அட்டையை அணுகக்கூடியதாக மாற்ற ஜெர்மனி விரும்புகிறது.

வெளிநாட்டினர் தொழில் பயிற்சி அல்லது படிப்பிற்காக வருவதற்கும், கல்வி அல்லது வேலைக்காகத் தொடர்ந்து வருவதற்கும் ஜெர்மனியை விரும்பதக்க இடமாக மாற்ற ஜெர்மனி அரசு நினைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button