ஜேர்மனி செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஜேர்மனி செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Germany Study Visa Rules For 2025 Updates

2025ஆம் ஆண்டில் ஜேர்மனி அதன் கல்வி விசா (Study Visa) விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

ஜேர்மனியானது Student Visa – முழுநேர பல்கலைக்கழக படிப்புகளுக்காக வழங்கப்படும் விசா, Student Applicant Visa – நுழைவுத் தேர்வுகள், சேர்க்கை செயல்முறைக்காக வழங்கப்படும் விசா மற்றும் Language Course Visa – ஜேர்மனியில் படிப்பதற்கு முன்பு மொழி பயிற்சி செய்ய வழங்கப்படும் விசா போன்ற விசாகளை வழங்குகின்றன.

அதன்படி, புதிய கல்வி விசாவில் நிதி தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்ப செயல்முறையும் விரைவாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் 11,208 யூரோக்களை (மாதத்திற்கு சுமார் 934 யூரோ) ஒரு Blocked Account-ல் டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்தப் பணம் ஜேர்மனியை சென்று அடையும் வரை பயன்படத்தப்படாமல் இருக்க வேண்டும்.

மேலும், உதவி (Sponsorship)கடிதம், உதவித்தொகை (Scholarship), அல்லது நிதி உத்தரவாதம் போன்ற மாற்று நிதி ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

விசா விண்ணப்பத்திற்கு தேவையான தகுதிகள்

1. ஜேர்மனியின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சேர்க்கை உறுதிப்படுத்தல்.

2. நிதி ஆதாரங்களைச் சான்றுகளுடன் வழங்குதல். – செல்லுபடியாகும் மருத்துவ காப்பீடு.

3. மொழித் திறன் சான்றிதழ், கல்விச் சான்றுகள், நேர்மையான குற்றப்பதிவுசான்று (தேவைப்பட்டால்).

எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
1. நிதி தேவைகள் இன்னும் அதிகரிக்கலாம் (பணவீக்கத்தைப் பொறுத்து).

2. மின்னணு (Digital) விண்ணப்ப செயல்முறை விரைவாகும்.

3. நிதி ஆதாரங்களின் சோதனை கடுமையாகலாம்.

இந்த மாற்றங்கள், ஜேர்மனியில் படிக்க விரும்பும் மாணவர்கள் புதிய விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button