அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியான அதிர்ச்சி தகவல் | No Allowances Given Employees Of Electricity Board

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கு எந்தவிதமான சலுகை மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சென்ற 14 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தினைத் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த வேளையிலே இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்தினை எதிர்வரும் 24 ஆம் திகதி அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அது மாத்திரமல்லாமல், உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், புதிய மின்சார சபை சட்டத்தின் வடிவம், மறுசீரமைப்பு செயல்முறைகள் தொடர்பான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு, மனிதவள கணக்காய்வு மற்றும் மனிதவள தணிக்கை போன்ற விடயங்கள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதாக மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை தவிரவும், இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஊழியர்களை நியமிக்கும் முறை மற்றும் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நன்மைகள், அபிவிருத்தி முகவர்களால் வழங்கப்பட்ட உதவிகள், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணியகத்தை நிறுவுதல் மற்றும் உத்தேச புதிய நிறுவனத்தை நிறுவுதல் போன்றவற்றையும் அமைச்சர் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button