ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்து அரச ஊழியர்களுக்கு தேர்தல் தாமதத்தின் போது அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்குவது பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் அரச நிர்வாக செயலாளருக்கு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் சிபாரிசு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக செயலாளருக்கு உரிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து சுமார் 3000 அரச ஊழியர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், சம்பளமற்ற விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் சுமார் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பின்னணியில் அரச ஊழியர்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானத்தை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.