அரச சேவைகளை மேம்படுத்த புதிய திட்டம்

அரச சேவைகளை மேம்படுத்த புதிய திட்டம் | New Plan To Improve Government Service Sri Lanka

அரச சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த உபகுழுவில் சட்டத்தரணி உதயன கிரிந்திகொட தலைமையில் திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவினால் நியமிக்கப்பட்ட 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும், இந்த உபகுழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடி அரச சேவையின் திறமையின்மை, முறையான பொறுப்பின்மை, ஊழல், மோசடி, முறையான மதிப்பீட்டு நடைமுறையின்மை, முறையான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த உபகுழுவிற்கான முன்மொழிவுகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button