விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம் | Home Garden Lane Government Water Happiest News

நாட்டில் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்று கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், மேலும் கருத்து தெரிவித்த அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்போகத்தில் 3.6 மெட்ரிக் டன் விளைச்சலைப் பெற்றுகொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 2.4 மில்லியன் மெட்ரிக் டொன்களாகும்.

சில மாகாணங்களில் சிறந்த அறுவடை கிடைப்பதுடன், இந்த விளைச்சலுக்காக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் வறட்சி ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதனால் நீரை முடிந்த வரையில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது

சிறுபோகத்தில் 5 இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேயரில் விளைச்சலை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்காகவும் நீரை கவனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

அதேபோல் மேலதிக விளைச்சல் குறித்து அக்கறை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சோளம், கோதுமை, உருளைக் கிழங்கு போன்ற விளைச்சல்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button