பாடசாலை பைகள், காலணிகளின் விலையை குறைக்க தீர்மானம்!
உள்நாட்டு பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் உள்நாட்டு பாடசாலை பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றது.
டொலரின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அதிகரித்த பொருட்களின் விலைகள் டொலரின் பெறுமதி குறைக்கப்பட்ட போது மீண்டும் குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையினால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் விலை குறைக்கப்படாவிட்டால் அரசாங்கம் வேறு வழிக்கு செல்ல நேரிடும் எனவும் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை குறைந்த விலையில் சந்தையில் வெளியிடுமாறும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, உள்நாட்டு பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இராஜாங்க அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய உற்பத்திகளின் விலை எத்தனை சதவீதத்தால் குறைவடையவுள்ளது என்பது குறித்து மே 23 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.