அதிகரிக்கப்படவுள்ள துறைமுக ஊழியர்களுக்கான வருடாந்திர போனஸ்!
துறைமுக ஊழியர்களுக்கான வருடாந்திர போனஸை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது உட்பட பல சலுகைகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
அதன்படி, இந்த ஒப்பந்தம் வரும் 26 ஆம் திகதி நடைபெறும் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வருடாந்திர போனஸை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கவும், அதில் 60 சதவீதம் இந்த ஆண்டும், 2026 ஆம் ஆண்டும் 40 சதவீதம் வழங்கப்படும் என்றும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஓகஸ்ட் மாதம் முதல் துறைமுக ஊழியர்களின் சம்பள உயர்வுகளில் 80 சதவீதம் அதிகரிப்பு மற்றும் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட 3,500 ரூபா ஊக்கத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல சலுகைகள் குறித்தும் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.