ஹரின் பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
உயர்நீதிமன்றின் உத்தரவுக்கமைய, அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்ணான்டோவுக்கு (Harin Fernando) வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
முன்னர் ஹரின் பெர்ணான்டோ பதவி வகித்த அமைச்சுகளில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) சட்ட கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறித்த நியமனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் கொழும்பு (Colombo) மாவட்ட சட்ட செயலாளர் சட்டத்தரணி துசித்த குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஜனாதிபதியின் ஆலோசகர் பதவிக்கு ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்றின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர் வகித்த அமைச்சுகளில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தேர்தல் (Election) சட்டத்தை மீறுவதாகும் என சட்டத்தரணி துசித்த குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.