வெப்பமான வானிலை தொடர்ந்தும் – பொது மக்கள் எச்சரிக்கை
வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அதாவது வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், மாலை அல்லது இரவில் ஏற்படக்கூடிய சிறிதளவு மழையை தவிர, நாடு முழுவதும் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.