மக்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு – விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்!
மலையக மக்களுக்கான இந்திய அரசின் உதவியுடன் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.