இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை! வெளியாகவுள்ள IMF அனுமதி குறித்த இறுதி தீர்மானம்

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை! வெளியாகவுள்ள IMF அனுமதி குறித்த இறுதி தீர்மானம் | International Money Fund Decision About Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும்.

இதன் ஊடாக நிறைவேற்றுக்குழுவின் அனுமதி தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி இன்னும் 4 ஆண்டுகளில் கிடைக்கப்பெற உள்ளதுடன், முதல் தவணையாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இன்றைய தினத்துக்குள் கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும் நாட்டை கொண்டு செல்ல முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button