வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஐஎம்எப் இன் நிலைப்பாடு.!
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சுயாதீனமாக தயாரிக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியை சுதந்திரமாக மாற்றியமைத்தது போன்று புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமீபத்திய பணியாளர் ஒப்பந்தத்தின் மூலம் இந்த நிபந்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரிகளை உயர்த்தி, வரி வருவாயை அதிகரித்து, வரவு செலவுத் திட்டத்தை அரசு எதிர்காலத்தில் முதன்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கான அதிகபடியான வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என சட்டமொன்றின் ஊடாக பிரகடனப்படுத்துவதன் மூலம் நாட்டில் கடுமையான நிதிக் கட்டுப்பாட்டைப் பேண முடியும் எனவும் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.