இலங்கைக்கான IMFஇன் இரண்டாவது கடனுதவி தொடர்பான தகவல்
இலங்கைக்கான இரண்டாவது கடனுதவியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வழங்க சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளது.
இந்த தவணை கடன் கொடுப்பனவின் போது 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
கடன் தவணை விடுவிக்கப்படுவதற்கு முன்னர், சர்வதேச நாணயநிதியம் இந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கையின் பொருளாதாரம் குறித்து சிறப்பு விசாரணை மற்றும் கண்காணிப்பை நடத்த உள்ளது.
இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கான உறுதிமொழியை நிறைவேற்றுவது மற்றும் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை இந்தக் கண்காணிப்பு மற்றும் விசாரணையின் போது கடுமையாக ஆராயப்படும் என அறியப்படுகிறது.