இலங்கை குறித்து IMF இன் அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா உத்தியோகபூர்வ 2 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31)நாட்டை வந்தடைந்துள்ளார்.
குறித்த 2 நாள் விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் முகாமைத்துவப் பணிப்பாளர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது கொழும்பு துறைமுக நகரம் உட்பட பல திட்டங்களையும் அவர் அவதானிக்க உள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார வேலைத்திட்டத்தின் அண்மைக்கால போக்குகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகள் மற்றும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைத்தல் தொடர்பான பல சுற்று கலந்துரையாடல்களில் பங்கேற்பார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.