இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: இன்று முதல் நடைமுறை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: இன்று முதல் நடைமுறை | Ten Million Imported Eggs Ready To Released Market

இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (18) முதல் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் லங்கா சதொச நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இன்றிலிருந்து மக்கள் சதொச ஊடாக மக்கள் பண்டிகைக் காலங்களில் முட்டைகளை தட்டுப்பாடின்றி கொள்வனவு செய்ய முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 15 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அந்த கையிருப்புகளை விரைவில் தர பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பரிசோதனைகளின் பின்னர், சதொச கடைகளில் இருந்தும் சில தெரிவு செய்யப்பட்ட பல்பொருள் அங்காடிகளுக்கும் குறித்த முட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் முட்டை விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால், நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், முட்டை இறக்குமதியை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை மீண்டும் 55 முதல் 65 ரூபா வரை அதிகரித்துள்ளதனாலேயே, மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் எதிர்காலத்தில் பல அதிகார வரம்புகளின் கீழ் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button