இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் தகவல்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் தகவல் | Relaxation Of Import Restrictions Srilanka

தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அனுப்பி வைக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கை உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button