இலங்கை – இந்தியா இடையில் பாலம் – வெளியான அறிவிப்பு

இலங்கை - இந்தியா இடையில் பாலம் - வெளியான அறிவிப்பு | Ram Setu Land Bridge Between Sri Lanka And India

இலங்கையையும் (srilanka) இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் வகையில் பாதை நிர்மாணிக்கும் உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி (island-nation’s environment secretary) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயெ அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த மாதம் புதுடில்லியில் இது தொடர்பான கூட்டத்தில் இலங்கையின் உயர்மட்ட குழு பங்கேற்றது.

இராமேஸ்வரத்துக்கும் திருகோணமலைக்கும் இடையே இடையே நெடுஞ்சாலை மற்றும் தொடருந்து இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல்கள் இதன்போது நடைபெற்றன. இதன்மூலமாக இந்திய வர்த்தகர்கள் இலங்கையிடமிருந்தும் நன்மைகளைப் பெற முடியும் எனறும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

முன்மொழியப்பட்ட தரைவழி இணைப்பை ஏற்படுத்த மதிப்பிடப்பட்டுள்ள செலவு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலராகும். இந்த முழு செலவையும் இந்தியா ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இயற்கையான வடிவங்கள் ‘இராமர் பாலம்’ அல்லது ‘ஆதாமின் பாலம்’ என அழைக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது.

இந்தப் பாலம் அமைக்கப்படும்போது பாக்கு நீரிணையில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்கு சேதங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதா கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அவை மிகப்பெரிய சுண்ணாம்புத் திட்டு என்றும் பாலம் அமைப்பதால் அதில் எந்தவித சேதமும் ஏற்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button