ஒஸ்கார் வென்றது இந்தியா!
உலகப் புகழ்பெற்ற திரைத்துறை விருதான ஒஸ்கார் விருது விழா இன்று ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின் ஹொலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவை இந்திய நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள “நாட்டு நாட்டு´ பாடல் மூலப்பாடல் வகையிலும், ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதுவரை அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது விபரங்கள் பின்வருமாறு….
* சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது ”ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்” திரைப்படம்.
* சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதை வென்றது ”ப்ளாக் பான்தர் : வகாண்டா ஃபாரெவர்”
* சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான ஒஸ்கார் விருதை வென்றது “ தி வேல்” திறைப்படம்.
* சிறந்த துணை நடிகருக்கான விருதை ”எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” படத்திற்காக பெற்றார் கே ஹுய் குவான்.
* சிறந்த ஒளிப்பதிவுக்கான ஒஸ்கார் விருதை வென்றது ’ஆல் க்வயட் ஆன் தி வெஸ்டெர்ன் ஃபிரண்ட்’ திரைப்படம்.
* சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை வென்றது ’அன் ஐரிஷ் குட்பை’
* சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருதை ’எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்காக வென்றார் ஜேமி லீ கர்டிஸ்
* சிறந்த ஆவணப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது ’நவால்னி’
* சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதைப் பெற்றது ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’