இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் …!
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நேற்றைய தினம் (09) நள்ளிரவு 11.53 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது, இந்தோனேஷியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்ததனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது.
மேலும், கடந்த டிசம்பர் 31ம் திகதி பப்புவா மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.