இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் காலை இந்தோனேசிய தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹூகேவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது 6.2 ரிக்டர் அளவில், 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸ் நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் இடம்பெறுகின்றன.
அதேசமயத்தில், பிலிப்பைன்சில் மயோன் எரிமலை வெடித்து சிதறி வருவதால் வடகிழக்கு அல்பே மாகாணத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் பேர் வெளியேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.