இணைய நிதி மோசடி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.
இணைய (Online) பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் மாற்றப்பட்டு பெரும் நிதி மோசடி ஒன்று உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Waleboda) தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் பரிவர்த்தனை பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களாலே இந்த மோசடி நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஒன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும், இது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை1,000 முதல் 1,500 வரையிலான கணக்குகளில் பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் மோசமான நிலைமை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.