ஐபிஎல் போட்டி திடீர் ரத்து.! இந்திய – பாகிஸ்தான் பதற்றத்தின் எதிரொலி

ஐபிஎல் போட்டி திடீர் ரத்து.! இந்திய - பாகிஸ்தான் பதற்றத்தின் எதிரொலி | Ipl 2025 Called Off Amid Pakistan S Attack India

இந்தியாவின் தர்மசாலாவில் இன்று (08) நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, அண்டை நகரங்களான ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், முழு லீக்கையும் ரத்து செய்யப்படும் ஆபாயம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது பிசிசிஐ கூட்டம் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, ​​முதலில் ஃப்ளட்லைட் கோளாறு காரணமாக விளக்குகள் அணைந்தன. மழை காரணமாக ஆட்டம் திட்டமிட்டதை விட தாமதமாகத் தொடங்கியது, பின்னர் போட்டி ரத்து செய்யப்பட்டது.

அணிகளும் பார்வையாளர்களும் இறுதியில் அவர்களின் பாதுகாப்புக்காக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவத்தின் போது, “பார்வையாளர்களிடத்தில் எந்த பீதியும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் (பார்வையாளர்கள் மற்றும் வீரர்கள்) மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button