கிரிக்கெட் இரசிகர்களின் கொண்டாட்டம் இன்று ஆரம்பம்!

18 ஆவது ஐ.பி.எல் பருவகால தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru) அணிகள் மோதுகின்றன.

பிரமாண்ட விழாவுடன் ஆரம்பமாகும் இந்த போட்டியில், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரெப் இசை பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக விழாக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய்ஷா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இதனிடையே ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக நடப்பு ஆண்டு போட்டி நடைபெறும் கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூர், சண்டிகர், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் ஆரம்ப விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button