சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு புதிய நடைமுறை.

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு புதிய நடைமுறை | Digitization Of Prisoners By Obtaining Fingerprint

நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கைதியின் கைரேகைகளைப் பெற்று அவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button