ஜனவரியில் நடைமுறைக்கு வரும் சர்சைக்குரிய சட்டம்!

ஜனவரியில் நடைமுறைக்கு வரும் சர்சைக்குரிய சட்டம்! பறிபோகுமா கருத்து சுதந்திரம் | Current Security Bill Is Due In January 2024

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான ஆலோசனை செயன்முறைகள் மேற்கொள்ள மூன்று மாத காலத்தை குடிசார் சமூக அமைப்புகள் கோரியிருந்த நிலையில், அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

எனினும் திருத்தங்களை முன்மொழிந்துள்ள உச்ச நீதிமன்றம், நிகழ்நிலை பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், இந்த சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டிய தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு மூன்று மாத ஆலோசனை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என குடிசார் சமூக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அந்த வகையில் குடிசார் சமூக பிரதிநிதிகள் குழுவொன்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்கென சிங்கபூருக்கு சென்றிருந்தது.

இந்த சட்டமூலமானது சிங்கப்பூரின் நிகழ்நிலை பொய்மைகள் மற்றும் கையாளுதல் சட்டத்தை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அதிபரின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்துறை பங்குதாரர்களின் உள்ளீடுகளை இறுதிப்படுத்தப்பட்ட சட்டமூலத்தில் இணைப்பதற்கு அமைச்சு காத்திருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button