ஜப்பானில் பதிவான நில நடுக்கங்கள் : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் பதிவான நில நடுக்கங்கள் : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை | Tsunami Warning Issued In Japan After Earthquakes

ஜப்பானில் (Japan) இன்று (08) 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

மேலும், முதல் நிலநடுக்கம் மியாசாகி கடற்கரையிலிருந்து 20 மைல் தொலைவில் கியூஷுவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button