தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (27.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 660,575.95 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 661,898 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,350 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 163,450 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.